04.02 .2011 என் இசைக் குழந்தையை நான் பெற்றெடுக்கும் நாள்.அதன் மழலை மொழியை கேட்க நீங்கள் தயாரா?? .

Thursday, February 3, 2011

04.02 .2011 என் இசைக் குழந்தையை நான் பெற்றெடுக்கும் நாள்.அதன் மழலை மொழியை கேட்க நீங்கள் தயாரா?? .


Wednesday, February 2, 2011

தேசமே... புதிய இசைப் படைப்பு. இவ் இசை உருவாக்கமானது ராஜ்குமாரின் இசையில் தயாரிக்கப்பட்டு 2011 ஆம் ஆண்டில் இலங்கையின் தேசிய ஒருமைப்பாட்டை வலியுறுத்தும் ஒரு காத்திரமான படைப்பாகும்.

அந்த வகையில் இலங்கையின் அழகு மற்றும் மாட்சிகளை வெளிப்படுத்துவதுடன் பிரதேசங்களின் சிறப்புக்களையும் தொட்டுச் செல்லும் அழகிய பாடல் வரிகளுடன் உருவாக்கம் செய்யப் பட்டுள்ளது. இப்பாடல் வரிகளை கவிஞர் நவயுகா அவர்கள் சிறப்பாக எழுதயுள்ளார்.

இலங்கையின் அனுபவம் மிக்க இசைக் கலைஞரான A .டிரோன் அவர்கள்இப்பாடலை mixing ,Mastering செய்து மேலும் மெருகுபடுத்தியுள்ளார்.

பாடலை இலங்கையின் பிரபல பாடகர்களான சிவகுமார், நிலுக்சி ,மகிந்தகுமார் , டிரோன் ,கந்தப்பு ஜெயரூபன்,இர்பான் ,வபா ,பிரசாந்தினி,நித்தியானந்தன், ,பிரதீப்,நியுட்டன் ,கிரிஷான் மற்றும் ராஜ்குமார் ஆகியோர் பாடியுள்ளனர்.

பாடலுக்கான ராப் இசை வரிகளுடன் கிரிஷான் பாடியுள்ளார்.

இப்பாடல் இவ்வருட தேசிய தினத்தன்று இலங்கையின் வானலைகளில் தவழவுள்ளது.

http://www.tamilmirror.lk/ வீடியோ மற்றும் அனுசரணை வழங்குகிறார்கள். வழங்குகிறார்கள்.


Monday, January 31, 2011

தேசமே... புதிய இசைப் படைப்பு. இவ் இசை உருவாக்கமானது இலங்கையின் ஒருங்கிணைத்து ராஜ்குமாரின் இசையில் தயாரிக்கப்பட்டு 2011 ஆம் ஆண்டில் இலங்கையின் தேசிய ஒருமைப்பாட்டை வலியுறுத்தும் ஒரு காத்திரமான படைப்பாகும்.

அந்த வகையில் இலங்கையின் அழகு மற்றும் மாட்சிகளை வெளிப்படுத்துவதுடன் பிரதேசங்களின் சிறப்புக்களையும் தொட்டுச் செல்லும் அழகிய பாடல் வரிகளுடன் உருவாக்கம் செய்யப் பட்டுள்ளது. இப்பாடல் வரிகளை கவிஞர் நவயுகா அவர்கள் சிறப்பாக எழுதயுள்ளார்.

இலங்கையின் அனுபவம் மிக்க இசைக் கலைஞரான

history


பாடல் பிறந்த கதை

இப்படி ஒரு படலை உருவாக்க வேண்டும் என்ற என் கற்பனை 2005 ஆம்ஆண்டுவாக்கில் என் மனதில் கற்பனை வடிவமாக மாறியது.அக்கால ஆரம்பத்தில் தன சக்தி வானலையில் எனது முதலாவது பாடல் ஒலித்த களம் எனலாம்.கிட்டத் தட்ட மூன்று பாடல்களின் பின்னர் வனவாசம் செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டேன். அதாவது என் ஆசிரிய தொழிலின் பயிற்சி நிலையில் வவுனியாவில் மூன்று வருடங்கள் கழிந்தது .(அந்த கால கட்டத்தில் என்குருவின்வழியில் இசைத் தொகுப்பு கல்லூரியில் வெளிவந்தது வேறு கதை. )

பின்னர்
பல கால மாற்றங்களின் பின்னர் கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் எனது இசையின் அஞ்ஞாத வாசத்தின் பின்னர் மீண்டும் அஸ்தினாபுரம் கண்ட அர்ஜுனன் போல உள் நுழைந்த போது எனது பதில் கீதை புகட்டும் கிருஷ்ணன் போல வாய்த்த நண்பன் கோபிரமணன் உடன் இணைந்து ஓடி விளையாடு பாடலை உருவாக்கினோம்.இந்த காலகட்டத்தில் மற்றுமோர் பகுதியில் குறும் பட தயாரிப்புக்காக உருவான பாடலான இதயங்கள் இங்கு இணையட்டும் பாடலை நவயுகா அவர்கள் எழுதினர்.இந்த மூவரின் சிந்தனையில் தன எனது கனவு பீனிக்ஸ் பறவை போல மீண்டும் எழுந்து பறக்க தொடங்கியது



(தேசம் பாடலை உருவாக்கும் முதல் முயற்சியில் நானும் கோபி யும்.
)

பின்னர் இந்த முயற்சியின் முக்கிய திருப்பமாக சந்தித்த மற்றுமோர் சிறந்த மனிதர் இசையமைப்பாளர் டிரோன் அவர்கள்.

எம் மூவரது படைப்பாக உருவான "காதலே" பாடலின் இறுதிக் கட்ட கலவைக்காக (Mixing & Mastering ) சந்தித்த டிரோன் அண்ணா அவர்கள் எனது இசைப் பயணத்தில் மற்றுமோர் குரு என்றே கூற வேண்டும்.இத் துறையின் நுட்பங்கள் விடயங்களை எனக்கு பரிச்சயப் படுத்தி அத்துடன் எனது அத்திவாரத்தை இட உதவிய ஒரு நல்ல மனிதர் என்று கூறலாம்.நல்ல மனிதர் என்பதை விட நல்ல நண்பராக நல்ல மூத்த சகோதரனாக நல்ல வழிகாட்டியாக இருந்த இருக்கிற ஒருவர் டிரோன் அண்ணா என்பதுவே சாலப் பொருத்தமாகும்.

எனது வீட்டு ஓளிப்பதிவு கூடத்தை அமைக்க தேவையான ஆலோசனைகளையும் உதவிகளையும் தந்ததுடன் இன்று இப்பாடல் உருவாக்கும் முயற்சியில் எனக்கு உறு துணையாக இருந்து உதவிய அவரை என் வாழ்நாளில் மறக்க முடியாது.

இன்று இத்தனை கட்டங்களை தண்டி இப்பாடல் முழுவடிவம் பெறுவதற்கு உதவிய


இப்பாடல் உருவாக்கத்தில் இசைக்கு உயிர் கொடுத்த வரிகளுக்கு சொந்தக்காரர்

வணக்கம்


தேசம் இசைப் படைப்பானது இலங்கையின் தமிழ் இசையில் புதியதோர் அத்தியாயத்தை தொடங்கி வைக்கும் முகமாக செதுக்கப் படும் ஒரு இசைச் சிற்பம் .

இலங்கையின் பல்வேறு இடங்களில் இருக்கும் இசைக்கலைஞர்களை இணைக்கும் ஒரு புதிய முயற்சியில் பயணித்துக் கொண்டிருக்கும் ஒரு யாத்திரை ஆகும்.

இந்த இசைப் படைப்பின் சொந்தக்காரன் என்ற வகையில் என் குழந்தைப் பருவத்தில் நான் ரசித்த கலைஞர்கள் முதல் என் சம காலத்துக் கலைஞர்கள் வரை பலரை இணைத்து ஒரு காத்திரமான படைப்புடன் என் இசை அறிமுகத்தை நிகழ்த்தும் பாக்கியம் இப்படைப்பின் உடாக கிட்டுவது என் அதிஷ்டம் என்றே கூற முடியும்.

இப்படைப்பை இலங்கை முழுவதும் உள்ள தமிழ் இசைப் பிரியர்களின் காலடியில் தருக்றேன்.தங்கள் ஆதரவை நாடி....

ராஜ்குமார்.
யாவும் படைத்த இறைவன் அருளால் இயங்கும் உலகில் இயங்காப் பொருளும் இயங்கும் பொருளைப் போல் இசைக்குரிய பொருளாகும்.

யாவும் இசை.

"ராஜ்குமார்"