04.02 .2011 என் இசைக் குழந்தையை நான் பெற்றெடுக்கும் நாள்.அதன் மழலை மொழியை கேட்க நீங்கள் தயாரா?? .

lyricts

இப்பாடல் உருவாக்கத்தில் இசைக்கு உயிர் கொடுத்த வரிகளுக்கு சொந்தக்காரர் இசை உலகில் புது வரவாக வந்த கவிஞர் நவயுகா அவர்கள்.
click it for more about navayugah.  

பாடல் வரிகள் பின் வருமாறு அமைகிறது 

உள்ளம் தோறும்  உதயம் தருகிறயே  - தேசமே
உணர்வு தோறும்  உயிரைத் தருகிறயே
மூச்சில் எல்லாம்   வாசம் தருகிறயே தேசமே
பேச்சில் என்றும் வீரம் தருகிறயே

வான் தொடும் கற்பகத் தருக்கள் யாழ் கொண்ட செல்வமே
சிலிர்த்து ஓடும் அருவிச் சத்தம் மலை நகர் மாட்சியே
மீன் பாடும் மந்திரப் பாடல் மட்டுநகர் மேன்மையே
அலைகள் ஸ்வரம் சொல்ல திருமலை புகழ் ஓங்குமே

என் தேசமே என் சுவாசமே
உன் காற்றிலே ஜீவன் வாழுதே....
உன் வாசலே என் நேசமே
பூ  வசமே உயிர் எங்குமே...

மழை மேகம் போல மோகம் கொண்டு ஓடித் திரிகிறேன்
என் தேச மார்பில் கண்கள் மூடுவேன்
தாகம் கொண்டு வேட்கை தணிக்க அலைந்து திரிகிறேன்
என் தேச நிழலில் அமைதி கொள்ளுவேன்....

மலை வளம் வயல் வளம் நிறைகின்ற நன்னாடு
கடலுடன் அலைகளும் சிரிக்கின்ற தாய் நாடு

இரத்தின தீபமாய் ஒளிர்கின்ற திருநாடு
சமுத்திரத்தின் நித்திலமாய் பெயர் கொண்ட தாய் நாடு

கடந்து செல்லும் காற்றின் காதில்
உன் பெயர் சொல்ல்கின்றோம்
உன்னை நீங்கிப் போனாலே
 மரணமே என்கிறோம்.

Rap :-
(எம் தேசம் எம் சுவாசம்
இந்நேரம் எல்லாரும்
ஒன்றாக கைகூடும்
உத்தம தருணம் இதுவே
எட்டுத் திக்கும் பரவட்டும்
எழ் கடல் கண்டம் தாண்டட்டும் - தாயே
உன் நாமம் உலகம் எங்கும் போற்றட்டும்
சுற்றும் நவ ரத்தினங்கள்
நவ மாகாணங்கள்
 ஒட்டுமொத்தமாய் - இலங்கை
முழுவதும் அதிசயங்கள் 
தாய் மண்ணின் பெருமை போற்றிப் பாட வா வா
so we go  நமோ நமோ தாயே .......)


 

யாவும் படைத்த இறைவன் அருளால் இயங்கும் உலகில் இயங்காப் பொருளும் இயங்கும் பொருளைப் போல் இசைக்குரிய பொருளாகும்.

யாவும் இசை.

"ராஜ்குமார்"