04.02 .2011 என் இசைக் குழந்தையை நான் பெற்றெடுக்கும் நாள்.அதன் மழலை மொழியை கேட்க நீங்கள் தயாரா?? .

intoduction


" தேசம் " இது நீண்டகால கனவு முயற்சி.பல பரிமாணங்களை தாண்டி பல முயற்சிகளில் ஏறி இறங்கி இறுதியில் நினைத்த வடிவத்தை நினைத்ததை விடவும் மேலாக முடிக்க தக்க ஒரு நிலையை அடைந்த ஒரு இலட்சியம் என கூறலாம்.

இது எனது தனிப்பட்ட கனவு என்று கூறினால் அது அபத்தம்.இது சில இளம் இரத்தங்களின் ஓட்ட வேகத்தில் உருவெடுத்த அசுவம் என்று பகர்வதே சத்தியம்.சத்தியம் மட்டுமல்ல சாத்தியம் ஆவதற்கும் அதுவே காரணம் என்பது தான் நித்திய நிதியமாய் நிற்கும் நிஜமாகும்.

"தேசம் "
  • புதிய வரவாக வந்த பழைய சாதம்.
  • இசைக் குழந்தையாக என முதல் பிரசவம்.
  • நண்பர்களின் கைகளால் தூக்கி விடப்பட்ட ஒரு நட்பின் கதை.

"தேசம்" இலங்கையின் புகழ்மிக்க தமிழ் இசைக் கலைஞர்களை ஒன்றாக இணைக்கும் ஒரு பா(டல்)லம்.இலங்கையில் தமிழில் பத்துக்கும் மேற்பட்ட கலைஞர்கள் இணைந்து செயற்பட்ட ஒரு தனிப்பாடல் என்ற பெயருக்கு இப்பாடல் பொருத்தமானது என கருதுகிறேன்(என் அறிவுக்கு எட்டிய வகையில்.)


இவ்வாறு சொல்லிக் கொண்டே போகலாம்.

மொத்தத்தில் தேசம் பாடல் ஒரு தவம்.
யாவும் படைத்த இறைவன் அருளால் இயங்கும் உலகில் இயங்காப் பொருளும் இயங்கும் பொருளைப் போல் இசைக்குரிய பொருளாகும்.

யாவும் இசை.

"ராஜ்குமார்"