04.02 .2011 என் இசைக் குழந்தையை நான் பெற்றெடுக்கும் நாள்.அதன் மழலை மொழியை கேட்க நீங்கள் தயாரா?? .

Wednesday, February 2, 2011

தேசமே... புதிய இசைப் படைப்பு. இவ் இசை உருவாக்கமானது ராஜ்குமாரின் இசையில் தயாரிக்கப்பட்டு 2011 ஆம் ஆண்டில் இலங்கையின் தேசிய ஒருமைப்பாட்டை வலியுறுத்தும் ஒரு காத்திரமான படைப்பாகும்.

அந்த வகையில் இலங்கையின் அழகு மற்றும் மாட்சிகளை வெளிப்படுத்துவதுடன் பிரதேசங்களின் சிறப்புக்களையும் தொட்டுச் செல்லும் அழகிய பாடல் வரிகளுடன் உருவாக்கம் செய்யப் பட்டுள்ளது. இப்பாடல் வரிகளை கவிஞர் நவயுகா அவர்கள் சிறப்பாக எழுதயுள்ளார்.

இலங்கையின் அனுபவம் மிக்க இசைக் கலைஞரான A .டிரோன் அவர்கள்இப்பாடலை mixing ,Mastering செய்து மேலும் மெருகுபடுத்தியுள்ளார்.

பாடலை இலங்கையின் பிரபல பாடகர்களான சிவகுமார், நிலுக்சி ,மகிந்தகுமார் , டிரோன் ,கந்தப்பு ஜெயரூபன்,இர்பான் ,வபா ,பிரசாந்தினி,நித்தியானந்தன், ,பிரதீப்,நியுட்டன் ,கிரிஷான் மற்றும் ராஜ்குமார் ஆகியோர் பாடியுள்ளனர்.

பாடலுக்கான ராப் இசை வரிகளுடன் கிரிஷான் பாடியுள்ளார்.

இப்பாடல் இவ்வருட தேசிய தினத்தன்று இலங்கையின் வானலைகளில் தவழவுள்ளது.

http://www.tamilmirror.lk/ வீடியோ மற்றும் அனுசரணை வழங்குகிறார்கள். வழங்குகிறார்கள்.


No comments:

யாவும் படைத்த இறைவன் அருளால் இயங்கும் உலகில் இயங்காப் பொருளும் இயங்கும் பொருளைப் போல் இசைக்குரிய பொருளாகும்.

யாவும் இசை.

"ராஜ்குமார்"