04.02 .2011 என் இசைக் குழந்தையை நான் பெற்றெடுக்கும் நாள்.அதன் மழலை மொழியை கேட்க நீங்கள் தயாரா?? .

Monday, January 31, 2011

history


பாடல் பிறந்த கதை

இப்படி ஒரு படலை உருவாக்க வேண்டும் என்ற என் கற்பனை 2005 ஆம்ஆண்டுவாக்கில் என் மனதில் கற்பனை வடிவமாக மாறியது.அக்கால ஆரம்பத்தில் தன சக்தி வானலையில் எனது முதலாவது பாடல் ஒலித்த களம் எனலாம்.கிட்டத் தட்ட மூன்று பாடல்களின் பின்னர் வனவாசம் செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டேன். அதாவது என் ஆசிரிய தொழிலின் பயிற்சி நிலையில் வவுனியாவில் மூன்று வருடங்கள் கழிந்தது .(அந்த கால கட்டத்தில் என்குருவின்வழியில் இசைத் தொகுப்பு கல்லூரியில் வெளிவந்தது வேறு கதை. )

பின்னர்
பல கால மாற்றங்களின் பின்னர் கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் எனது இசையின் அஞ்ஞாத வாசத்தின் பின்னர் மீண்டும் அஸ்தினாபுரம் கண்ட அர்ஜுனன் போல உள் நுழைந்த போது எனது பதில் கீதை புகட்டும் கிருஷ்ணன் போல வாய்த்த நண்பன் கோபிரமணன் உடன் இணைந்து ஓடி விளையாடு பாடலை உருவாக்கினோம்.இந்த காலகட்டத்தில் மற்றுமோர் பகுதியில் குறும் பட தயாரிப்புக்காக உருவான பாடலான இதயங்கள் இங்கு இணையட்டும் பாடலை நவயுகா அவர்கள் எழுதினர்.இந்த மூவரின் சிந்தனையில் தன எனது கனவு பீனிக்ஸ் பறவை போல மீண்டும் எழுந்து பறக்க தொடங்கியது



(தேசம் பாடலை உருவாக்கும் முதல் முயற்சியில் நானும் கோபி யும்.
)

பின்னர் இந்த முயற்சியின் முக்கிய திருப்பமாக சந்தித்த மற்றுமோர் சிறந்த மனிதர் இசையமைப்பாளர் டிரோன் அவர்கள்.

எம் மூவரது படைப்பாக உருவான "காதலே" பாடலின் இறுதிக் கட்ட கலவைக்காக (Mixing & Mastering ) சந்தித்த டிரோன் அண்ணா அவர்கள் எனது இசைப் பயணத்தில் மற்றுமோர் குரு என்றே கூற வேண்டும்.இத் துறையின் நுட்பங்கள் விடயங்களை எனக்கு பரிச்சயப் படுத்தி அத்துடன் எனது அத்திவாரத்தை இட உதவிய ஒரு நல்ல மனிதர் என்று கூறலாம்.நல்ல மனிதர் என்பதை விட நல்ல நண்பராக நல்ல மூத்த சகோதரனாக நல்ல வழிகாட்டியாக இருந்த இருக்கிற ஒருவர் டிரோன் அண்ணா என்பதுவே சாலப் பொருத்தமாகும்.

எனது வீட்டு ஓளிப்பதிவு கூடத்தை அமைக்க தேவையான ஆலோசனைகளையும் உதவிகளையும் தந்ததுடன் இன்று இப்பாடல் உருவாக்கும் முயற்சியில் எனக்கு உறு துணையாக இருந்து உதவிய அவரை என் வாழ்நாளில் மறக்க முடியாது.

இன்று இத்தனை கட்டங்களை தண்டி இப்பாடல் முழுவடிவம் பெறுவதற்கு உதவிய


No comments:

யாவும் படைத்த இறைவன் அருளால் இயங்கும் உலகில் இயங்காப் பொருளும் இயங்கும் பொருளைப் போல் இசைக்குரிய பொருளாகும்.

யாவும் இசை.

"ராஜ்குமார்"